சென்னை – அக் -18,2023
newz – webteam
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய். 1.70 இலட்சம் அபராதம்
காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கடந்த 21.01.2022 அன்று திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பத்மனாபோகி, ஆண், வயது-22, த/பெ. கருடதவஜாபோகி மற்றும் தனம் ஜெய் காரியா, ஆண், வயது 22, த/பெ. மகரண்டகாரியா ஆகியோரை சோதனை செய்த போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுபிரிவு குற்ற எண் : 03/2022 த/பி.8 (c) r/w 20 (b) (ii) (c), 29 (1) of NDPS Act, 1985 வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் கடந்த 29.03.2022 அன்று சென்னை போதைப் பொருள் வழக்குகள் சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் நேற்று் நீதிபதி தனது தீர்ப்பில் இரு குற்றவாளிகளுக்கும் தலா 12 வருடங்கள் கடுங் காவல் தண்டனையும் மற்றும் 1.70 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை திறம்பட புலன்விசாரணை செய்து மற்றும் குறுகிய காலத்தில் நீதிமன்றத்தில் விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் ஆளிநர்களை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், இகா.ப, காவல்துறை மிகவும் பாராட்டினார்.
0 Comments