சென்னை – அக் -18,2023
newz – webteam
செங்கல்பட்டுமாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ2,60,000/- லட்சம் மதிப்பிலான 2808 பாண்டிச்சேரி மது பானபாட்டில்கள் பறிமுதல் ஒருவர்கைது.
தமிழகத்திற்கு பிற மாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடந்த முக்கிய நடவடிக்கையில் 17.10.2023 அன்று சுமார் ரூ.2,60,000/ லட்சம் மதிப்பிலான 2808 பாண்டிச்சேரி அரசு மது பானபாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய ரூ.5,00,000/ மதிப்பிலான TN-22- CC-1011 Scorpio Car பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பாண்டிச்சேரி அரசு மதுபானம் கடத்தல் ரகசிய தகவலின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டு செக்போஸ்ட் அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, புதுப்பட்டு செக்போஸ்ட்டில் நான்கு சக்கர வாகனத்தை மறித்த குழுவினர், ஒரு குற்றவாளியான, அம்மன் கோயில் தெரு.பள்ளங்குப்பம், சிறுநகர் , செய்யூர் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் சார்ந்த சிவசங்கர்/ 38 என்பவரிடம் இருந்து 2808 பாண்டிச்சேரி அரசு மதுபானபாட்டில்களை கைப்பற்றப்பட்டு குற்றவாளியை கைது செய்தும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மேற்படி நான்குசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.அசலாக்கதுறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், இகா.ப, கூடுதல் டிஜிபி , மற்றும் டி.ஐ.ஜி ராதிகா மேற்பார்வையில், காவல் கண்காணிப்பாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய். ரூ.260,000/- லட்சம் மதிப்பிலான 2808 பாண்டிச்சேரி அரசு மதுபானபாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய ரூ.5,00,000/- மதிப்பிலான ஸ்கார்பியோ கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி பாண்டிச்சேரி அரசு மதுபானபாட்டில்கள் பறிமுதலில் ஈடுப்பட்ட அனைத்து
அதிகாரிகளையும் கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப.
பாராட்டியுள்ளார்
0 Comments