தூத்துக்குடி – அக் -19,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 6 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – இந்த ஆண்டு இதுவரை 150 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப நடவடிக்கை.
கடந்த 18.08.2023 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை அல்லிகுளம், முருகன் நகர் பகுதியில் உள்ள பழைய கோரியில் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் மகேந்திர பெருமாள் (23) என்பவரை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி தட்டப்பாறை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த அங்குபாண்டியன் மகன் பொன்முத்துராம் (20) மற்றும் சிலரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் தொடர்புடைய பொன்முத்துராம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி
கடந்த 17.08.2023 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த கனி என்பவரது மனைவி அந்தோணியம்மாள் (67) என்பவரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி அம்;பேத்கர் நகரை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சந்தனராஜ் (23) என்பவரை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான சந்தனராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த்
கடந்த 03.08.2023 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலைகண்ணு மகன் தெய்வக்கண்ணன் (35) மற்றும் சிலரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான தெய்வக்கண்ணன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை,
கடந்த 03.10.2023 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரநல்லூர் வழ ஆழிக்குடி ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் முறப்பநாடு பாறைக்காடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் சிவசிதம்பரம் (19), முறப்பநாடு அகரம் பகுதியை சேர்ந்த பொன்இசக்கி மகன் ராமசாமி (எ) ராம் (19) மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் துரைப்பாண்டி (எ) ஒத்த கை துரைப்பாண்டி (21) ஆகியோரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளிகளான சிவசிதம்பரம், ராமசாமி (எ) ராம் மற்றும் துரைப்பாண்டி (எ) ஒத்த கை துரைப்பாண்டி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப தூத்துக்குடி தட்டப்பாறை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த அங்குபாண்டியன் மகன் 1) பொன்முத்துராம், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் 2) சந்தனராஜ்,செய்துங்கநல்லூர் கால்வாய் பகுதியை சேர்ந்த சுடலைகண்ணு மகன் 3) தெய்வக்கண்ணன், முறப்பநாடு பாறைக்காடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் 4) சிவசிதம்பரம், முறப்பநாடு அகரம் பகுதியை சேர்ந்த பொன்இசக்கி மகன் 5) ராமசாமி (எ) ராம் மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் 6) துரைப்பாண்டி (எ) ஒத்த கை துரைப்பாண்டி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி குற்றவாளிகளான குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 எதிரிகள் உட்பட 150 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments