கடலூர் – அக் -26,2023
newz – webteam
கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை சார்பில் சமூக நீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தலைமையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்பது கல்வி கற்பதே ஆகும். பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு கல்விதான் மிக முக்கியமானதாகும். படிக்கும் காலகட்டத்தில் தேவையில்லாத சிக்கல்களில் சிக்காமல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். எதையும்
எதிர்கொள்ளும் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்
கற்றலை சிதைக்கும் சிக்கல்களும் தீர்வுகளும்
என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. தேர்வு பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
0 Comments