திருநெல்வேலி – அக் -29,2023
newz – webteam
குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட நெல்லை மாநகர காவல் துறையினர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி இ.கா.ப உத்தரவின் பேரில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் (கிழக்கு) K.சரவணகுமார் அவர்கள் (மேற்கு), .G.S.அனிதா (தலைமையிடம்) ஆகியோர் வழிகாட்டுதலின் படி அனைத்து சரக காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் நெல்லை மாநகர எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சோதனை செய்தனர். மேலும் சந்தேகப்படும்படி நபர்கள் யாரெனும் வந்தால் காவல் துறைக்கு உடனடியனாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விடுதி பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
0 Comments