திண்டுக்கல் – நவ-02,2023
newz – webteam
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.4,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லக்குட்டியூர் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த அதே ஊரைச் சேர்ந்த ராஜா (28) என்பவரை எரியோடு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் அவர்கள், நீதிமன்ற முதல்நிலைக் காவலர் .கலாராணி அவர்கள் மற்றும் உதவி அரசு வழக்கறிஞர் அமுதா அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 01.11.2023-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளி ராஜா என்பவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 4,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
0 Comments