சென்னை – நவ-04,2023
newz – webteam
இணைய தள குற்றப்பிரிவு தலைமையகம் சென்னை.தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், இந்தஅதிகரித்த தேவையை சில நேரங்களில் சைபர்குற்றவாளிகள் போலி
இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாககளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே
பொதுமக்கள் இந்த மோசடித் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும்
இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.
இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
பாதிக்கப்பட்டவர்கள். பட்டாசுகள் நம்ப முடியாத விலையில் கிடைப்பதான விளம்பரத்தை யூடியூபில் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்டார் வீடியோவிஸ் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு ஆர்டரைப் பற்றி விசாரிக்கிறார். கஸ்டமர் நேர் ஜபர் பாதிக்கப்பட்டவரின் அழைப்பிற்கு பதிலளித்து, ஆர்டர் செய்த பிறகு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிருமாறு அவருக்குத் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்டவர். வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள https:/luckycrackerscom என்ற இணையதளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்கிறார். பின்னர் வாட்ஸ் அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார், விலைகள் மிகவும் குறைவாக இருப்பதான் பாதிக்கப்பட்டவர்கள் தங்கன் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.
ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பு எண் மற்றும் இணையதளம் அணுக முடியாததாகிவிட்டதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் இழந்து பட்டாசுகளும் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.
கடந்த 1 மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழ்கண்டநடவடிக்கைகள் அவசியமான வை.நீங்கள் வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும்
சரிபார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும். அலுவலக முகவரி மற்றும்தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணையதளத்தில் உள்ளதா எனச்சரிபார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப்பயன்படுத்துவதை உறுதிசெய்யயும்:பிரபமில்லாத இணையதாங்களுக்கு, கேஷ் ஆன் டெலிவரி விருப்பத்தை தேர்வு
செய்வதன் மூலம் பனத்தை கொடுப்பதற்கு முன் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் டெலிவரி
செய்யப்படுவதை உறுதிசெய்யவும்.
நீங்கள் போலி இணையதளத்தில் ஏதேனும் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தால்,
கடவுச் சொற்களை மாற்றுதல் மற்றும் உங்கள் வங்கி கணக்குகளைக் கண்காணிப்பது
போன்ற உங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்.
ஸ்கிரீன்ஷாட்கள், மின்னஞ்சல் தாலை தொடர்புகள் மற்றும் இணையதளத்தில்
உள்ள தொடர்பு விவரங்கள் உட்பட உங்கள் பரிவர்த்தனைகளின் பதிவுகளை
வைத்திருங்கள். நீங்கள் மோசடியைப் புகாரளிக்க வேண்டும் என்றால் இந்தப் பதிவுகள்முக்கியமானதாக இருக்கும்.
நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம்கட்டணமில்லா உதவி
எண்1930-8டயல்செய்து புகாரளிக்கலாம் அல்லதுwww.cybercrime.gov.in_என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவுசெய்யலாம்.
0 Comments