சென்னை – நவ -13,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 12.112023 மற்றும் 13.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாக வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2246 பேர் மீது 2206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதில் 2005 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2095 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments