சென்னை – நவ -17,2023
newz – webteam
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் செயல்பாடுகள்மாநில எல்லைச் சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைச் சோதனைச்
சாவடிகளில் களத்தண்காணிப்பு மூலம் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தலைகுடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலணாய்வவுத்துறை கண்காணிக்கிறது.
மாநிலங்களுக்குச் செல்லும் சில வழித்தடங்களில் தகவல் அடிப்படையிலான, திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தல்காரர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படாத கிடங்குகள், அரவை ஆலைகள், மற்றும் நியாயவிலைக்கடைகள் கண்காணிக்கப்படுகின்றன
13-10.2023 முதல் 12.11-2023 வரையிலான காலகட்டத்தில் குடிமைப்பொருள். வழங்கள் குற்றப்புலனாய்வுத் துறை அலகுகள் மூலம் 932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம்-2,093 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி 660 மீட்டர் பொது விநியோகத் திட்ட மண்னென்னெய் மற்றும் 196 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகள் வணிக ரீதியாக பயன்படுத்தியமை) ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ17,13,845 ஆகும். கடத்தல் பதுக்கலில் ஈடுபட்ட 860 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 143 வாகணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 254 வாகனங்கள் மின் ஏலம் மற்றும் பொது ஏலம் மூலம் வாகன விடுவிப்பு செயல்முறை பின்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் 07 முக்கிய குற்றவாளிகள் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 103 நபர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீதுஈ குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110 கீழ் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
0 Comments