மதுரை – நவ -19,2023
newz – webteam
சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு காவல் ஆணையர் இறுதி அஞ்சலி
நேற்று மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூர்சம்ஹார விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தெற்குவாசல் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் பணியில் இருந்தபோது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருத்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் காலமானார். இன்று இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள வண்ணாமரைப் பட்டியில்
மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) குமார்.,அவர்களும்,
காவல் கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து திட்டம்) திருமலைகுமார், அவர்களும் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டு முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
0 Comments