திருப்பத்தூர் – நவ -21,2023
newz – webteam
மிளகாய் பொடி தூவி ரூபாய் 60 இலட்சம் பணம் பறிக்க முயற்சி செய்த முக்கிய எதிரிகள் கைது- மாவட்ட காவல்துறையின் அதிரடி நடடிக்கை.
திருப்பத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று மதியம் சுமார் 12.00 மணிக்கு பூபாலன் நகை கடையில் வேலை செய்து வரும் இரண்டு நபர்கள் ரூபாய் 60 இலட்சம் பணத்தை தனியார் வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணீல் மீளகாய் பொடியை தூவி அவர்களிடமிருத்த பணத்தைப் பறிக்க முயற்சி செய்தள்ளனர் அவர்கள் சத்தம்போடவே பொதுமக்கள் ஒன்று கூடியதால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிட்டாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி தலைமையில் விஜயகுமார். திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் , கேமாவதி மற்றும் காவர்கள் அடங்கிய தனிப்படை மிக துரிதமாக செயல்பட்டு அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மேற்படி சம்பவனத்துடன் தொடர்புடைய 1.பிரபாகரன்-28 விஷமங்கலம், 2.ராஜ்குமார் – 25 சௌந்தம்பள்ளி, 3.சுரேஷ்-28 முத்தமிழ்நகர் திருப்பந்தூர், 4.ராஜேஷ் 35 வேல நகர் திருப்பத்தூர், 5.ரவிசங்கர்-37 பெங்களூர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இக்குற்றவழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய புலன்விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளது
மேலும் குற்றம் தடந்த சில மணி நேரங்களிலே வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படையினனர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டிணார்.
0 Comments