நீலகிரி – நவ -22,2023
newz – webteam
இன்று ஆங்கில பத்திரிகையான டெக்கான் கிரானிக்கல் என்ற பத்திரிக்கையில் நீலகிரி பதிப்பில் “POCSO CASE VICTIM GIRL HANDCUFFED IN OOTY” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இது தொடர்பாக கீழ்கண்ட மறுப்பினை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உதகை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 7/2023 U/s 5 (1), 6 of POCSO Act & 9 of Child Marriage Act on இந்த மாதம் 2ம்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 07ம்தேதி அன்று பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை கோத்தகிரி நீதிமன்ற நடுவரிடம் 164 கு.வி.மு.ச. வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டி உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் அழைத்து சென்றார். பின்னர் 15ம்தேதி அன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் வளர்ப்பு தாயான வழக்கின் வாதி பாதிக்கப்பட்ட சிறுமிவை கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் சம்மந்தமாக உதகை டி.எஸ்.பி.யசோதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் விசாரணையில் சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து அதில் கைவிலங்கு போடவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியையும் விசாரித்த போது தனக்கு கைவிலங்கு போடப்படவில்லை என சிறுமி தெரிவித்துள்ளார்.
ஆகையினால் பத்திரிகையில் வந்த செய்தி உண்மை இல்லை என
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
0 Comments