தென்காசி – நவ -28,2023
newz – webteam
குற்றாலத்தில் அபாயகரமான முறையில் வாகனத்தில் சென்ற நபருக்கு அபராதம் விதிப்பு
குற்றாலம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமான தலைக்கவசத்தை அணிந்து கொண்டு அடையாளம் தெரியாத நபர் சுற்றி வருவதாகவும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் B.E., உத்தரவின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் அப்பகுதி CCTV கேமராக்களை சோதனை செய்ததில் அது தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (23) என தெரியவந்தது, இது குறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூபாய் 10,000 அபராதம் விதித்து மேற்படி இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
0 Comments