திருநெல்வேலி – நவ -29,2023
newz – webteam
மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழே செழியநல்லூர் காலனி திருவை சேர்ந்த மகாராஜன்(27) என்பவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் எலக்ட்ரிசனாக வேலை செய்து வந்துள்ளார். மகாராஜனுக்கும் கற்பகவள்ளி(27) என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் ஒரு மகள் உள்ளார் இந்நிலையில் 26.11.2023 அன்று கார்த்திகை தீபம் என்பதால் வீட்டில் விளக்குகள் ஏற்றி வைத்திருந்ததாகவும் மகாராஜன் நிலை தடுமாறி கீழே விழும் பொழுது குத்துவிளக்கு கழுத்தில் பட்டு பலத்த இரத்த காயம் ஏற்பட்டு இருந்ததை பார்த்த அவருடைய மனைவி அருகிலுள்ளவர்கள் அழைத்து அவர்களின் உதவியால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சிகிச்சையில் இருந்து வந்த மகராஜன் 27.11.2023 அன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து மானூர் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்த நிலையில் மேற்படி இவ்வழக்கு சம்பந்தமாக மானூர் காவல் ஆய்வாளர் சபாபதி விசாரணை மேற்கொண்டதில் மகாராஜனுக்கும் அவருடைய மனைவி கற்பகவள்ளிக்கும் இடையே வீட்டில் வைத்து சண்டை ஏற்பட்டுள்ளது. பின் கற்பகவள்ளி தற்காப்புகாக கத்திரிக்கோலை எடுத்து குத்துவது போல் பயமுறுத்தியதாகவும் அப்போது மகாராஜனின் கழுத்தில் தவறுதலாக கத்தி பட்டு பலத்த இரத்த காயம் ஏற்பட்டதால் தான் இறந்துள்ளார் என்பது விசாரனையில் தெரியவந்துள்ளது இந்நிலையில் மானூர் காவல் ஆய்வாளர் சபாபதி கற்பகவள்ளியை இன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
0 Comments