திருவாரூர் – டிச-02,2023
newz – webteam
வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை வெள்ளத்தில் பாதிக்கப்படுபவர்களை மீட்க, திருவாரூர் மாவட்டத்தில், மாநில பேரிடர் மீட்பு குழுவினரால் பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்கும் பொருட்டு திருவாரூர் தலைமையிடத்தில் மூன்று குழுக்களும், திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய உட்கோட்டங்களுக்கு தலா ஒரு குழுவும் (கூடுதல் 08 குழுக்கள்) அமைக்கப்பட்டு மாநில பேரிடர் மீட்பு (SDRF) குழுவினரால் பயிற்சி பெற்றகாவலர்களை நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அந்த பேரிடர் மீட்பு குழுவுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை, தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தக துறைஅமைச்சர்ராஜா, ஆய்வுமேற்கொண்டார்
அப்போது மாவட்ட ஆட்சியர் .சாருஸ்ரீ இ.ஆ.ப மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஜெயக்குமார்,உடனிருந்தார்.
0 Comments