சென்னை – டிச -09,2023
Newz – webteam
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட மாதுளம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கீதா கடந்த 13.01.2019 அன்று தனது மகன் சக்திவேல் என்பவரை ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தமிழ்செல்வன், மணிமாறன் (எ) காளிதாஸ், கார்த்திக், ராஜகுரு, ராஜகோபால் ஆகியோர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, இவ்வழக்கின் புலன்விசாரணை முடித்து குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை 25.05.2019-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.கும்பகோணம் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில்
நேற்று நீதிபதி ராதிகா நீதிமன்ற விசாரணை முடித்து, இவ்வழக்கின் குற்றவாளிகளுக்கு 147, 148 இத.சன் கீழ் 03 வருட சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000/- அபராத தொகையும், பிரிவு 302 இ.த.ச-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராத தொகையும் விதித்து உத்திரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் கா.ரமேஷ், சிறப்பாக நீதிமன்ற விசாரணை பணியினை மேற்கொண்ட க. சீதா, ( முதல்நிலை காவலர்-2619 ) நா. ராதிகா, ( முதல்நிலை காவலர்-1658 மற்றும் இவ்வழக்கின் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர்களது சிறந்த பணியினால் மேற்படி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கபெற்றுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்
உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மண்டலம் மற்றும் மாநகரத்தில்காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ரௌடிகளுக்கு எதிரான
தனிப்படைகள் அமைக்கப்பட்டு சரித்திர பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு அவர்களதுநடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும்
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளில் மாவட்டங்களில் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் மற்றும் மாநகரங்களில் காவல் துணை ஆணையர்கள் நீதிமன்ற
தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு தண்டனை பெறுவதற்கு வாய்ப்புள்ள
வழக்குகளை கண்டறிந்து தண்டனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த நடவடிக்கை காவல்துறை தலைமை அலுவலக காவல்துறை உதவி தலைவர்
நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு ) அவர்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் தலை மறைவு ரௌடிகளை கைது செய்ய சிறப்பு முன்னெடுப்புநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்ட விரோதமாக சொத்துக்கள்
சேர்த்துள்ள ரௌடிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீதான வழக்குகளில் பொருளாதார
புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
0 Comments