திருநெல்வேலி – டிச -13,2023
Newz – webteam
திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாநகரத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கும், அரசு வழக்குரைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டிய காவல் ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .மகேஸ்வரி இ.கா.ப தலைமையில் காவல் ஆணையாளர் அலுவகலத்தில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கிழக்கு காவல் துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப மேற்கு துணை கமிஷனர் K.சரவணகுமார் மற்றும் தலைமையிட துணை கமிஷனர் .G.S அனிதா மற்றும் சிறை துறை கண்காணிப்பாளர் மருத்துவத்துறை அதிகாரிகள், அரசு வழக்குரைஞர்கள், அனைத்து காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர் .
இக்கூட்டத்தில், மாநகரில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவமனை அலுவல்கள், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
பின்பு மாநகரில் பதியப்பட்ட வழக்குகளில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது போன்ற சிறப்பான செயல்களில் ஈடுபட்ட காவல் ஆளிநர்கள் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் உட்பட மாநகரத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களை அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்
0 Comments