கோயம்புத்தூர் – டிச -14,2023
கல்லூரி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று CYBER SECURITY IN DIGITAL BANKING என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன், இ.கா.ப.,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் சுமார் 300 மாணவ, மாணவியர்களுக்கு வலைதளங்களை கையாளும் போதும், ஆன்லைன் வங்கி கணக்கை பயன்படுத்தும் போதும், பணப்பரிமாற்றம் செய்யும் போதும் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், வலைதளங்களில் குற்றவாளிகள் ஏமாற்றும் விதங்கள் குறித்தும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், சிறப்புரையாற்றி அறிவுரை வழங்கினார்.
0 Comments