சென்னை – டிச -14,2023
Newz – webteam
சென்னை, டிச. 14–
சிறைத்துறை டிஜிபி மற்றும் ஏடிஜிபிக்கள் உள்பட மொத்தம் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீரென மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:–
பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்வர் தயாள் சிறைத்துறை இயக்குநராகவும், அங்கிருந்த டிஜிபி அமரேஷ் புஜாரி தமிழ்நாடு காகித ஆலை மூத்த கண்காணிப்பு அதிகாரியாகவும், காகித ஆலை ஐஜி பிரேமாத் குமார் மின்வாரிய விஜிலென்ஸ் ஐஜியாகவும், சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி தமிழ்ச்சந்திரன் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி தர்மராஜன் சென்னை நகர கிழக்கு மண்டல இணைக்கமிஷனராகவும், கடலோர அமலாக்கப்பிரிவு எஸ்பி சந்திரசேகரன் கோவை மண்டல சிவில் சப்ளைஸ் சிஐடி எஸ்பியாகவும், அங்கிருந்த பாலாஜி மதுரை மாநகர கிழக்கு துணை ஆணையராகவும், அங்கிருந்த பிரதீப் திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாகவும், திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் சென்னை நகர கிழக்கு போக்குவரத்து துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த சமய்சிங் மீனா கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
0 Comments