சென்னை – டிச -14,2023
Newz – webteam
சென்னை மண்ணடியில் போதைப்பொருட்கள் கடத்திய இருவர் கைது. ரூபாய் 25லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
சென்னை மண்ணடியில் இரண்டு பேர் போதைப்பொருட்களை
பதுக்கி வைத்திருப்பதாக சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு
போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நேற்று சென்னை
மண்ணடி பகுதியில் இரகசிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது
சந்தேகத்தின் பேரில் மண்ணடியை சேர்ந்த அப்துல் ரகுமான் எர்ஷாத் (42) மற்றும்
சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார் (20) ஆகியோரை
சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ எடை கொண்ட பழுப்பு
நிற இரசாயன பவுடர் போன்ற பொருள் இருந்தது. அதனை சோதனை செய்த
போலீசார் அது மெத்தாகுளைன் என்ற போதைப்பொருள் என உறுதி செய்து
அதனை கைப்பற்றியதோடு மேற்படி இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு
செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 25லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த மெத்தாகுளைன் என்ற போதைப்பொருள் யாரிடமிருந்து வாங்கப்பட்டது, யாரிடம் விற்கப்படுகிறது என்பது குறித்து சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் மற்றும் மனமயக்கபோதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண். 10581 மூலமும், வாட்ஸ்-அப் எண். 94984-10581 அல்லது மின்னஞ்சல் ஐ.டி [email protected] மூலமும் தெரிவிக்கலாம். மதுவிற்பனை தொடர்பான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான புகார் மற்றும் தகவல்களைப் பகிர்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பிரத்யேக வாட்ஸ்-அப் எண் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments