திருவாரூர் – டிச -16,2023
Newz – webteam
மெச்சதகுந்த வகையில் கடந்த 15 தினங்களில் பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் படி பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக தனிப்படையினரின் தீவிர வேட்டை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
அதன்படி கடந்த 15 நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்
1.குட்கா- 140 கிலோ மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்து வைத்திருந்த
பணம் ரூபாய்.5,86,000/- கைப்பற்றப்பட்டது.
2.பாண்டிச்சேரி மாநில சாராயம் – 110 லிட்டர் மற்றும் கடத்ததலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
3.தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த, சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட மெச்சத்தகுந்த வகையில் செயல்பட்ட மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் A.அஸ்வந்த் ஆன்டோ ஆரோக்கியராஜ்,
S.ராஜேஷ் கண்ணன், காவல் ஆய்வாளர், மன்னார்குடி நகர காவல் நிலையம்,
ஸ்ரீநிதி, உதவி ஆய்வாளர், மன்னார்குடி நகர காவல் நிலையம்,
தெட்சிணாமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர்-1164, மன்னார்குடி நகர காவல் நிலையம்,
பிரபு, தலைமை காவலர்-464, மன்னார்குடி தாலுக்கா காவல் நிலையம்,
விஜயகுமார், முதல் நிலை காவலர்-1255, வடுவூர் காவல் நிலையம்,
மகேஷ்குமார்,
காவலர்-1034, மன்னார்குடி நகர காவல் நிலையம்,
கண்ணதாசன், சிறப்பு உதவி ஆய்வாளர்-1091, தனிப்பிரிவு, திருவாரூர் தாலுக்கா காவல் நிலையம்,
.அறிவழகன், முதல்நிலை காவலர்-264, தனிப்பிரிவு, வலங்கைமான் காவல் நிலையம்,
சரவணன், முதல் நிலை காவலர்-1169, தனிப்பிரிவு, ஹரித்துவாரமங்கலம் காவல் நிலையம்,
சந்திரமோகன், தலைமை காவலர்-1022, வலங்கைமான் காவல் நிலையம்,
சிவக்குமார், காவலர்-586, தனிப்பிரிவு, வைப்பூர் காவல் நிலையம்
ஆகியோருக்கு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
0 Comments