கோயம்புத்தூர் – டிச -26,2023
Newz – webteam
சூலூர் காவல் நிலைய பகுதியில் 500 CCTV கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா…
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 68 பள்ளிகளும், 12 கல்லூரிகளும் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கம்பெனிகளும் உள்ளன. கம்பெனிகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் உள்ள பல மாவட்டத் தொழிலாளர்களும் சூலூர் பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.மேலும் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து கோவைக்கு வரும் வாகனங்களுக்கு பிரதான சாலைகளாக கோவை – அவிநாசி நெடுஞ்சாலை, சேலம்-கொச்சின் L&T நெடுஞ்சாலை, கோவை-திருச்சி நெடுஞ்சாலை, செட்டிபாளையம்-நெடுஞ்சாலை ஆகியவைகள் உள்ளன. இவற்றை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகள் பலவும் உள்ளது. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும், மேற்படி சாலைகளில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை அடையாளம் காணவும் சிசிடிவி கேமராக்கள் அத்தியாவசியமாக உள்ளது.
கோவை மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஒரு ஆண்டாக சாலைகளின் சந்திப்புகள், கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையத்தின் எல்லைகள் ஆகியவற்றில் தனியார் நிறுவனத்தின் சி எஸ்ஆர் நிதி உதவி பெற்று 100 இடங்களில், சுமார் 500 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கேமராக்களை கண்காணிக்க ஒருங்கிணைந்த கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டது.
மேற்படி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையினை இன்று மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, இ.கா.ப., துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கோவை சரக துணை தலைவர் சரவணசுந்தர், இ.கா.ப., மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேற்படி விழாவில் கேமராக்கள் பொருத்த உதவியாக இருந்த தனியார் நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குற்றங்களை கண்டுபிடிக்கவும், காவல்துறைக்கு உதவியாகவும், மக்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவோம்…
0 Comments