மதுரை – டிச -29,2023
Newz – webteam
கடந்த அக்டோபர் 10ம் தேதி மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆத்திகுளம் அருகில் நத்தம் புதிய மேம்பாலத்தில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான தமிழ்செல்வன் (எ) மாடு அஜீத்குமார் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று இரவு மதுரை வீரகலூர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படையினர் மேற்கண்ட வீரகனூர் அருகே தேடிசென்று, அங்கு தலைமறைவாக பதுங்கி இருந்த மேற்படி தமிழ்செல்வன் (எ) மாடு அஜீத்குமாரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் வீரகனூர் வைகை ஆற்றின் உள்ளே முட்புதரில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்ததின்படி அவரை கூட்டி சென்று அவர் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து மூன்று கத்தி மற்றும் ஒரு அருவாள் ஆகியவற்றை கைப்பற்றிய போது போலீசாரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார். மேற்படி தப்பி ஓடியவர் வைகை ஆற்றின் கரையிலிருந்து கீழே குதித்ததில் அவருக்கு இரண்டு கால்களில் காயம் ஏற்பட்டு அங்கிருந்து ஓட முடியாமல் விழுந்து கிடந்தவரை தனிப்படை போலீசார் உடனடியாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதில் அவருக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். மேற்கண்ட முக்கிய குற்றவாளியான தமிழ்செல்வன் (எ) மாடு அஜீத்குமார் மீது பல்வேறு
கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது.
0 Comments