நாகபட்டினம் – டிச -30,2023
Newz – webteam
நாகபபட்டினம் மாவட்ட எஸ்பி ஹர்சிங் இன்று பத்திரிக்கையாளரை சந்தித்தார் அப்பபோது அவர் கூறியதாவது
2023 இந்த வருடத்தில் மட்டும் 44 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது, கஞ்சா சம்பந்தமாக 116 நபர்களை கைது, 695 கிலோ, 220 கிராம் கஞ்சா பறிமுதல், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2899 நபர்கள் கைது, 158079 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 115 நபர்கள் கைது, சூதாட்டத்தில் ஈடுபட்ட 474 நபர்களை கைது, நீதி மன்றம் மூலம் 1763 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மணல் கடத்தலில் ஈடுபட்ட 19 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர், மணல் கடத்தல் குற்ற செயலுக்கு பயன்படுத்தபட்ட 13 டிராக்டர்கள், 3 ஜே,சி,பி, 1 மினி வேன், 1 டிப்பர் லாரி மற்றும் 4 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியுள்ளனர், (8) விதியை மீரி வாகனங்களை இயக்கியவர்கள் மீது 67283 வழக்குகள் பதியப்பட்டு ரூபாய் 6365600/- அபராத தொகை பெறப்பட்டுள்ளது. (9) விபச்சார குற்றத்தில ஈடுபட்ட 13 நபர்களை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
2023 இந்த வருடத்தில் மட்டும் 44 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது, கஞ்சா சம்பந்தமாக 116 நபர்களை கைது, 695 கிலோ, 220 கிராம் கஞ்சா பறிமுதல், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2899 நபர்கள் கைது, 158079 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல், (4) லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 115 நபர்கள் கைது,சூதாட்டத்தில் ஈடுபட்ட 474 நபர்களை கைது, நீதி மன்றம் மூலம் 1763 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.மணல் கடத்தலில் ஈடுபட்ட 19 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர், மணல் கடத்தல் குற்ற செயலுக்கு பயன்படுத்தபட்ட 13 டிராக்டர்கள், 3 ஜே,சி,பி, 1 மினி வேன், 1 டிப்பர் லாரி மற்றும் 4 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியுள்ளனர், விதியை மீரி வாகனங்களை இயக்கியவர்கள் மீது 67283 வழக்குகள் பதியப்பட்டு ரூபாய் 6365600/- அபராத தொகை பெறப்பட்டுள்ளது. விபச்சார குற்றத்தில ஈடுபட்ட 13 நபர்களை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
குண்டர் தடுப்பு சட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்ச்சி, பாலியல் ரீதியான குற்றங்கள், கஞ்சா, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் (2023) இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் குற்றவாளிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் கொலை மற்றும் கொலை முயற்ச்சி குற்ற செயல்களில் ஈடுபட்ட 15 குற்றவாளிகள, கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 குற்றவாளிகள், பாலியல் ரீதியான குற்ற செயல்களில் ஈடுபட்ட 1 குற்றவாளி கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை குற்ற செயல்களில் ஈடுபட்ட 05 குற்றவாளிகள் என இந்த வருடத்தில் மட்டும் 44 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகள் மீது
தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் (2023) இந்த
வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் 52 வழக்குகள் பதியப்பட்டும் குற்ற செயல்களில்
ஈடுபட்ட 116 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 695 கிலோ, 220 கிராம்
கஞ்சாவை கைப்பற்றியும் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 கார்கள் மற்றும் 12 இரு
சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம்,வெளிமாநில மது கடத்தல் மற்றும் விற்பனை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான
வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்
அடிப்படையில் (2023) இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் 2830 வழக்குகள்
பதியப்பட்டும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 2899 நபர்களை கைது செய்தும்
அவர்களிடமிருந்து 158079 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் 180 ML அளவுள்ள 17373 மது
பாட்டில்கள் மற்றும் 190 லிட்டர் கள்ளு, 530 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் மற்றும்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 15 கார்கள், 13 ஆட்டோக்கள், மற்றும் 292 இரு சக்கர
வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மது கடத்தல் குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட
276 வாகனங்களை பொது மக்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு ருபாய் 47,45,670/-
தொகையை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதை தவிர மேலும் 120 வாகனங்கள்
ஏலம் விட தயார் நிலையில் உள்ளது. புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா ஆகியவை கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் (2023) இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் 1113 வழக்குகள் பதியப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1116 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம்மிருந்து 1042 கிலோ 750 கிராம் தடைசெய்யபட்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை
நாகப்பட்டினம் மாவட்ட முலுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. அதன் அடிப்படையில் (2023) இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் 101 வழக்குகள் பதியப்பட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை ஈடுபட்ட 115 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 20 செல் போன்கள், 3866 லாட்டரி சீட்டுகள், ரூபாய் 1,68,970/- பணம் மற்றும் நான்கு இரு சக்கர வாகனங்கள் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல்
தடைசெய்யப்பட்ட சூதாட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சூதாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் (2023) இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் 145 வழக்குகள் பதியப்பட்டு தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்ட 474 நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து ருபாய் 99,770/-, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்தல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து
முடிப்பது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்
அடிப்படையில் (2023) இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் நிலுவையிலிருந்த 6900
வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கள் செய்யப்பட்டு அதில் 1763 குற்றவாளிகளுக்கு
நீதி மன்றம் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு எதிராக குற்ற செயலில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளுக்கு நீதி மன்றம் முலம்
ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதங்களில் 4 முறை மக்கள் நீதி
மன்றம் மூலம் நிலுவையிலிருந்த 2259 வழக்குகள் சுமுகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மனல்கடத்தல்
நாகப்பட்டினம் மாவட்ட முலுவதும் மணல் கடத்தல் குற்ற சம்பவங்கள் தொடர்பான
வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்
அடிப்படையில் 2023 இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் 14 வழக்குகள்
பதியப்பட்டு 19 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர், மேலும் மணல் கடத்தல் குற்ற
செயலுக்கு பயன்படுத்தபட்ட 13 டிராக்டர்கள், 3 ஜே,சி,பி, 1 மினி வேன, 1 டிப்பர் லாரி
மற்றும் 4 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.
வாகன வழக்குகள்
நாகப்பட்டினம் மாவட்ட முலுவதும் சட்டத்திற்க்கு புறம்பாக வாகனங்களை இயக்குவோர் மீது
தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் (2023) இந்த
வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் 67283 வழக்குகள் பதியப்பட்டு ருபாய் 6365600/-
அபராத தொகை பெறப்பட்டுள்ளது.விபச்சார வழக்குகள்
நாகப்பட்டினம் மாவட்ட முலுவதும் சட்டத்திற்க்கு புறம்பாக விபச்சார குற்றத்தில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் (2023) இந்த வருடத்தில் கடந்த மாதங்களில் மட்டும் விபச்சார குற்றத்தில் ஈடுபட்ட 13 நபர்களை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா.
0 Comments