திண்டுக்கல் – ஜன -02,2024,
Newz – webteam
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.75,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021 ம் ஆண்டு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் (50) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனா (26) ஆகிய இருவரை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப், இ.கா.ப, அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி நீதிமன்ற தலைமைக் காவலர் சாந்தி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளி ஜோதிமுருகன் என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 75,000/- அபராதமும் அர்ச்சனா என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
0 Comments