திண்டுக்கல் – ஜன -02,2024
Newz – webteam
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 04 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
இன்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் (71) மற்றும் பாபு (47) ஆகிய இருவரை சின்னாளப்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப, அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி ,நீதிமன்ற தலைமைக் காவலர் தேவபாலா மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின்் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளி கேசவன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000/- அபராதமும் பாபு என்பவருக்கு 04 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
0 Comments