திருநெல்வேலி – ஜன – 02,2023
Newz – webteam
திருநெல்வேலி டவுன் மாதா தென் மேல தெருவை சார்ந்த சுப்பிரமணியன் அவர்களின் குமாரர் இசக்கி ராஜா என்ற ராஜா
கடந்த ஆண்டு ஜனவரி 17ம்தேதி அன்று ரூபாய் 44, 499/- கொடுத்து புதிய செல்போன் வாங்கி உள்ளார்.
செல்போனை சிறுகுழந்தை கைத்தவறி தண்ணீரில் போட்டு விட்டது தண்ணீரில் செல்போன் விழுந்த அடுத்த நிமிடமே செல்போனை எடுத்து சர்வீஸுக்கு கொடுத்துள்ளார்.
செல்போனை சர்வீஸ் செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்து சர்வீஸ் செய்வதற்கு 9 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று சர்வீஸ் நிறுவனம் கேட்டுள்ளது
இதனைக் கேட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்
செல்போன் வாங்கும் போது நிறுவனம் கொடுத்த விளம்பரத்தில் 1.5 மீட்டர் தண்ணீரில் போட்டாலும் Firdge க்குள் ஒரு மணி நேரம் செல்போனை வைத்தாலும் (Water protection)1.8 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே போட்டாலும் செல்போன் பாதிக்காது என்றும் நல்ல முறையில் வேலை செய்யும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார்
ஒரு நிமிடம் கூட தண்ணீரில் செல்போனை போடாத நிலையில் செல்போன் வேலை செய்யவில்லை
வாட்டர் ப்ரூப் உள்ள செல்போன் என்று விளம்பரம் செய்து கொடுத்துள்ளார்கள்
போலியான விளம்பரம் செய்து நுகர்வோரை சுரண்டி அதிக லாபத்திற்கு விற்க வேண்டும் என்ற நோக்கில் விற்பனை செய்து உள்ளார்கள் போலியான விளம்பரத்தை நம்பி வாங்கி உள்ளதாகவும் முறையற்ற வணிபம் எனவும் இதனால் மன உளச்சலுக்கு ஆளான இசக்கிராஜா நஷ்டஈடு கேட்டு வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார் இதனை விசாரணை செய்த ஆணையத் தலைவர் கிளடஸ் டோன் பிளசிங் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் போலியான விளம்பரம் செய்து விற்பனை செய்த செல்போன் தொகையான ரூபாய் 44, 999/-ம்
17 .1 .2023 இல் இருந்து ஆறு சதவீத வட்டியுடன் 1மாதத்திற்குள் செல் போன் விற்பனை செய்த நிறுவனம் மற்றும் உற்பத்தி செய்த நிறுவனம் சேர்ந்து கொடுக்க வேண்டும்.
தவறினால் ஒன்பது சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும்
இசக்கி ராஜாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ₹20,000/- ம் வழக்கு செலவு ₹5000/- சேர்த்து ஒரு மாத காலத்திற்குள் சர்வீஸ் சென்டரும் சேர்ந்து கொடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments