சென்னை – ஜன -03,2023
Newz – webteam
கடலோர பாதுகாப்பு குழுமம் டிசம்பர் மாதத்தி கான முக்கிய நடவடிக்கைகள்
கடத்த ஆண்டு டிச 11ம்தேதி அன்று பிற்பகல் சுமார் 3.00 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கடற்கரை பகுதியில் கஞ்சா கடத்தல் குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, முத்தையாபுரம் கடற்கரை பகுதியில் இன்னோவா வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. வாகனத்தை சோதனை செய்ததில், சாக்கு பைகளில் கடல் வழியாக அண்டை நாடுகளுக்கு கடந்த 120 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சூரங்குடி காவல் நிலையத்தில் வழக்கு் பதிவு செய்யபட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமநாதபுரத்தை சார்ந்த சேதுராமபாண்டியன் மகன் தர்மேந்திரன் தூத்துக்குடியை சார்ந்த கணேசன் மகன் சிவபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பவயல் பேருந்து நிலையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல்வெள்ளரி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் முத்துகண்ணு மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று அம்மாபட்டிணத்தை சார்ந்த ஷேக் தாவூத் மகன் ஜகுபர் சாதிக் என்ற நபரை சோதனை செய்ததில் அவரிடம் 8, கிலோ எடையுள்ள கடல்வெள்ளரி கைப்பற்றப்பட்டது இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக அறந்தாங்கி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
12.12.2023 அன்று மதியம் 1 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மெரினா உயிர் காக்கும் பிரிவு காலாலர்கள்
பணிபுரியும் போது தற்கொலை செய்து கொள்ள கடலில் குதித்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்
மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் 25.122023 அன்று சுமார் 3 மணியளவில், பெசன்ட் நகர் கடற்கரையில் மெரினா உயிர்காப்புப் பிரிவு காவலர்கள் பணியில் இருந்தபோது, ஆசிக்குமார் 27என்ற நபர் கடலில் குளிக்கும் போது கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டதும், உடனடியாக மெரினா உயிர்காப்பு பிரிவு காவலர்கள் துணிச்சலுடன் சென்று அந்த நபரை மீட்டு உயிரை காப்பாற்றினர்.
3) 25.12.2023 அன்று காலை 10 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரையில் கடலில் தத்தளித்த ஹரிஹரன் 28/ மற்றும் யோகேஸ்வரன் 23 ஆகிய இருவர் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட போது கடலோர பாதுகாப்புக் குழு காவலர்கள் மற்றும் மரைன் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டனர்.
28.12.2023 அன்று மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்னால் பணியில் இருந்த மெரினா உயிர்காப்பு பிரிவு காவலர்கள், தற்கொலை செய்து கொள்ள வந்த ஒருவரை மீட்டனர். மீட்கப்பட்ட நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மிக்ஜாம் புயலால் 04.122023 அன்று சென்னை மாநகரில் பெய்த கனமழையால், வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் பலரை கூடுதல் காவல்துறை இயக்குநர் காவல்துறை கடலோர பாதுகாப்பு குழுமம் அவர்களது உத்தரவின் பேரில் சிறப்பு மீட்புக் குழுவினர் உயிர்காக்கும் உபகரணங்களுடன், சென்னை மாநகர காவல் துறையினருடன் இணைந்து 05.122023 முதல் 07.12.2023 வரை மீட்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கினர் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பல ஏரிகள் உடைக்கப்பட்டன இதனை தொடர்ந்து கூடுதல் காவல்துறை இயக்குநர் காவல்துறை கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி தலைமையில் 1,காவல் கண்காணிப்பாளர், கமாண்டன்ட், துணைக் கண்காணிப்பாளர்கள், 10. காவல் ஆய்வாளர்கள் 17. உதவி காவல் ஆய்வாளர்கள், 190 – கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள், 5. தொழில்நுட்ப படகு பணியாளர்கள், 6. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் 83 – மெரினா உயிர்காப்புப் பிரிவினர் 19.12.2023 முதல் 21-12.2023 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில் 2379 நபர்கள் இந்த குழுவினரால் மீட்கப்பட்டனர். பணிகளை மேற்கொண்டனர்.
0 Comments