திருவாரூர் – ஜன -06,2024
Newz – webteam
திருவாரூர் மாவட்டம்வடபாதிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறியில்
ஈடுபட்ட பிரபல ரௌடி ராஜ்கண்ணு என்பவர் கைது
நேற்று காலை சுமார் 11.00 மணியளவில் கொரடாச்சேரி காவல் சரகம், அத்திக்கடை பகுதியைச்சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஆடு வாங்குவதற்காக வடபாதியங்கலம் மற்றும் மாவூர் சென்று விட்டு ரயில்வே கேட் அடுத்த திருநாட்டியத்தாங்குடி அருகே தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுசிறுநீர்கழித்துக்கொண்டிருக்கும் போது அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த நபர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து ரூபாய் 2000 பணத்தை பறித்து சென்றுள்ளார். பணம் பறித்து சென்ற நபரை இருவரும் பின்தொடர்ந்து விரட்டிய போது அவர் தனது இருசக்கர வாகனத்துடன் திருநாட்டியத்தாங்குடி கிருஸ்துவாபை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையில் மோதி கீழே விழுந்து அருகில் இருந்த சட்ரஸ் பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டார்.
மேலும் அந்த நபர் கத்தி வைத்திருந்ததால் இவர்கள் பயந்து கொண்டு வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் வழிப்பறி வழக்கு பதிவு செய்து உடன் சம்பன இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு எதிரியை தேடிய போது மேற்கண்ட வழக்கின் குற்றம்சாட்டபட்ட நபர்
தனது வலது காலில் காயத்துடன் திருநாட்டியத்தாங்குடி சட்ரஸ் அருகே இருந்துள்ளார்.வடபாதிமங்கலம் காவல்துறையினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமளையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் மேற்கண்ட எதிரியிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு. மேலதிருப்பந்துருத்தி கிராமம். மேலத்தெருவைச்சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்கண்ணு 40என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து இருசக்கர வாகனம் ஒன்று. திருடிய செல்போன் ஒன்று. ரூபாய் 2000/- பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
மேலும் இவர் தஞ்சாவூர் மாவட்டம், நடுகாவேரி காவல் நிலையத்தில் ரவுடிகள் லிஸ்டில் உள்ளார் என்பதும், இவரின் மீது சென்னை. வேலுலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்மற்றும் திருவாரு உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அடிதடி,திருட்டு, கொலைமுயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தொடர்விசாரணையில் தெரியவந்தது.
அதில் குறிப்பாக கடந்த ஆண்டு ஜீலை மாதம் கொரடாச்சேரி
காவல்நிலையம் அத்திக்கடையில் சம்கதீன் என்பவர் வெட்டப்பட்ட வழக்கில்
மேற்கண்ட ராஜ்கண்ணு என்பவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார்.என்பதும் தெரியவருகிறது. இந்நிலையில் வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில்
பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட வழிப்பறி வழக்கில் ராஜ்கண்ணு கைது
செய்யப்பட்டு 18.01.2024 தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
பெற்று வருகிறார்.
0 Comments