மதுரை – ஜன -07,2024
Newz – webteam
2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தற்போது முதல் நிலை காவலராக மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு. போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் 45 காவலர்களுக்கு 01.01.2024-அன்று தலைமைக் காவலர்களாக பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்.லோகநாதன், இ.கா.ப நேரில் அழைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்
மேலும் காவல் ஆணையர் பேசுகையில், காவல் துறையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாராட்டுதலை தெரிவித்ததுடன். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தங்களது திறன்களை மேம்படுத்திகொள்ளவும். சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்தியும். மற்றும் அதன் மூலம் நிகழும் குற்றங்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திக்கொண்டு பணியாற்றிடவும். காவல்நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களை கனிவுடன் நடத்துவதற்கு அறிவுரை வழங்கியும். ஒவ்வொருவருடைய பணியும் தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமைசேர்க்கும் விதமாக அமையும்படி மேலும் சிறப்பாக பணிபுரியவும் வாழ்த்தினார்
0 Comments