திருநெல்வேலி – ஜன -13,2024
Newz – webteam
திருநெல்வேலி மாநகரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், மார்கெட் பகுதிகள், திரையரங்குகள் மற்றும் ஆற்றுப்படுகைகள் போன்ற இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் கண்காணிக்கவும், திருநெல்வேலி மாநகர ஆணையர் பா.மூர்த்தி, இ.கா.ப. உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாநகர காவல்துறையை சேர்த்த 472 காவல் அதிகாரிகள் மற்றும் ஆனிதர்களும், ஊர்க்காவல்படையை சேர்ந்த 184 ஆளிநர்களும் மொத்தம் 656 சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரிநாள் மற்றும் காணும் பொங்கல் தினத்தன்று ஆற்றங்கரைகளில் உணவருந்த கூடும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் இறங்காதவாறுகவனமுடன்பார்த்துக்கொள்ளஅறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவது மற்றும் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி மாநகரில் அனைத்து பகுதிகளிலும் காவல் ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் ரோந்து அலுவலில் இருக்கும்.பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனையெனில் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 0462-2562651 ஆகிய எண்களில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments