சென்னை – ஜன -19,2024
Newz – webteam
466 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது மற்றும்758 கிலோ கஞ்சா பறிமுதல்
போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மற்றும் நடப்பு ஜனவரி மாதங்களில் போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 பெண் உட்பட மொத்தம் 466 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 758 கி.கி. கஞ்சா, 2028 கி.கி மெத்தம்பேட்டமைன், 700 டேப்பென்டால் 100mg மாத்திரைகள், 321 நைட்ரோவெட் மாத்திரைகள் ஆகிய ரூ. 1.36 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் 15 இருசக்கர வாகனங்கள், 1 லாரி, 1 ஆட்டோ மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 04.012024 அன்று, வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஷேக்தாவூத் 42 மற்றும் அன்சர் ஜிலானி 51) ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கி.கி மெத்தம்பேட்டமைன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 29 குற்றவாளிகளுக்கு தண்டனையுடன் அபராதமும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவில் கடந்த 02.06.2017-ம் தேதி தடை செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள ஹெராயின் என்னும் போதைப்பொருளை காரில் கடத்தி கொண்டு வந்த அகஸ்டின் தேன்ராஜ் என்பவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவில் கடந்த 11.12.2017-ம் தேதி காரில் 160 கி.கி கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தேவிபட்டினத்தை சேர்ந்த நையினார்சித்திக் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அபுல்காசிம் ஆகிய இரண்டு குற்றவாளிகளுக்கு 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,10,000/- அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும். போதைப்பொருள் வழக்குகளில்
சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களின் 16 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சட்ட அமலாக்கம்தவிர, மாணவர்களிடையே போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரானவிழிப்புணர்வை ஏற்படுத்த 45 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்நடத்தப்பட்டன.
போதைப்பொருள் மற்றும் மனமயக்க போதைப் பொருள்களின் சட்ட விரோத
விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா உதவி எண்.
10581 மூலம், வாட்ஸ்அப் எண்.94984 10581 அல்லது மின்னஞ்சல் ஐடி:
[email protected] மூலமும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களைதெரிவிக்கலாம்.
0 Comments