திருநெல்வேலி – ஜன -23,2024
Newz – webteam
35வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் ஆணையர்
நெல்லை மாநகரம் பாளை பகுதியில் இன்று காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., தலைமையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அருணா கார்டியா கேர் மருத்துவமனையிலிருந்து வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் வரை பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்சியில் காவல் பாளையங்கோட்டை சரக உதவி ஆணையர் பிரதீப் , போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர் பாளை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் , போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து , காவல் ஆய்வாளர் செல்லதுரை மற்றும் அருணா கார்டியா கேர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப.,இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழிப்புடன் தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி செல்லுமாறும், வாகன ஒட்டிகள் தங்களது உயிரை காத்து கொள்வதுடன், சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் விலைமதிப்பற்ற உயிரை காக்கவும், சாலை விதிமுறைகளை தவறாது பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
0 Comments