மதுரை – ஜன -27,2024
Newz – webteam
மதுரை மாநகர கோரிப்பாளையம் சந்திப்பு புதிதாக அமைய உள்ள உயர் மட்ட மேம்பாலம் மற்றும் தூண்கள் அமையும் பகுதிகளில் போக்குவரத்து மாற்று வழித்தடங்களை ஆய்வு செய்தல்
இன்று
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைய உள்ள புதிய உயர் ரக மேம்பாலத்தில் செல்லூர் வழியாக செல்லும் பாதையில் தூண்கள் அமைய உள்ள எம் எம் லாட்ஜ், பாலம் ஸ்டேஷன் ரோடு, புது பாலம் ஜங்ஷன் சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கான மாற்று பாதைகள் மற்றும் தடுப்புக்கள் அமைய உள்ள பகுதிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் IPS பார்வையிட்டார்.
உடன் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்சந்திரன் உதவி பொறியாளர்
ராஜாராம் மற்றும் பி.கே.எம்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தினரும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார், உதவி ஆணையர்.மாரியப்பன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments