திருநெல்வேலி – பிப் -12,2024
Newz – webteam
ஏ.டி.எம் – யில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கும் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் பிடித்த மூதாட்டிக்கு இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டு.
வடக்கு தாழையூத்து, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் 50 என்பவர் 05.02.2024 இன்று காலை தாழையூத்து போஸ்ட் ஆபிஸ் அருகே உள்ள SBI ATM ல் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அவருக்கு முன்னால் வந்த நபர் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி விட்டு பணத்தை எடுக்காமல் சென்றுள்ளார். பின்னர் பெருமாள் பணம் எடுக்க ஏடிஎம் அறைக்குள்ளே சென்ற போது ரூபாய் 8 ஆயிரம் பணம் ஏடிஎம் மிஷினில் வெளியே இருந்துள்ளது. இதனை அறிந்த பெருமாள் தாழையூத்து காவல் நிலையத்திற்கு வந்து ரூபாய் 8 ஆயிரம் பணத்தை நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.
திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி, மேல ரத வீதியை சேர்ந்த அமராவதி 65 என்பவர் வீட்டிற்கு முன்பு கோலம் போடுவதற்காக வெளியே நின்று கொண்டிருந்த போது, மாவடிபுதூர், வடக்கு தெருவை சேர்ந்த அருணாச்சல பாண்டியன் (35) என்பவர் அவரிடம் விலாசம் கேட்பது போல் கேட்டு அமராவதியில் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து சென்ற அருணாச்சல பாண்டியனை அமராவதி அமராவதி மற்றும் அவருடைய வீட்டிற்கு அருகே உள்ள கலா(40) என்பவரும் சேர்ந்து துணிச்சலுடன் பிடித்து திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்.,செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை துணிச்சலுடன் செயல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை பாராட்டி அமராவதிக்கு அதேபோல்
பெருமாள் என்பவரை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.
0 Comments