கோயம்புத்தூர் – பிப் -14,2024
Newz webteam
கோவை மாவட்டத்தில் தொடர் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது…..ரூபாய் 28,00,000/- மதிப்புள்ள 56.25 சவரன் தங்க நகைகள் பறிமுதல்… கோவை மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை..
கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம் கோட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் சில மாதங்களாக தொடர்ந்து வீடு புகுந்து திருடும் குற்றங்கள் நடைபெறுவதாக கோட்டூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., உத்தரவிட்டதன் பேரில் வால்பாறை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநிதி மேற்பார்வையில்
ஆனைமலை வட்ட காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜன் குற்றபிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுநாத் மற்றும் குற்றபிரிவு தலைமைக்காவலர்கள் உதயகுமார், .ஹரிதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன்விசாரணை மேற்கொண்டும்
பழங்குற்றவாளிகளை தனிக்கை செய்து விசாரணை செய்ததிலிருந்தும், 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரு சக்கர வாகனமானது தென்பட்ட நிலையில் இவ்வாகனத்தை பின் தொடர்ந்து மேற்படி வீடு புகுந்து திருட்டு நடைபெற்ற குற்றங்களில் சம்மந்தப்பட்ட எதிரியை தேடி வந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தற்போது கோட்டூர் பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மகன் ராமச்சந்திரன் (38) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில்
மேற்படி தொடர் வீடு புகுந்து திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படை போலீசார் மேற்படி குற்றவாளியிடமிருந்து கோட்டூர் மற்றும் ஆனைமலை பகுதியில் வீடு புகுந்து திருடிய 6 வழக்குகளின் சொத்துக்களான ரூபாய் 28,00,000/- மதிப்புள்ள 56.25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தும் மற்றும் எதிரி குற்றத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் மற்றும் ஆகியவைகளை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும் மேற்படி குற்றவாளி மீது மதுரை மாவட்ட சிலைமான்
காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், கருப்பாயூரணி காவல் நிலையத்தில்
6 வழக்குகளும், மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் 2வழக்குகளிலும் மற்றும் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 2 வழக்குகளிலும் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி தொடர் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படை காவல்துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும் குற்ற சம்பவங்களை வரும் காலங்களில் தடுக்கும் பொருட்டு கோட்டூர் காவல் நிலைய சரகத்தில் உல்லாச நகரில் 25 CCTV கேமிராக்களும் சமத்தூர் மகாலட்சுமி நகரில் 20,சிசிடிவி கேமிராக்களும்,பொருத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
ஆனைமலை காவல் நிலைய சரகத்தில் 12, இடங்களில் ஆனைமலை நகரை சுற்றிலும் 36,சிசிடிவி கேமிராக்களும் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு 94981-81212 77081-00100 எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
0 Comments