திருநெல்வெலி – மே,29,2024
Newz – webteam
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர், பால்கட்டளை, வடக்கு தெருவில் வசிக்கும் செல்லையா மகன் ஆறுமுகம் 30 இவர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் நபராவார். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 5 குற்ற வழக்குகள் உள்ளது.
மேற்படி நபருடன் தச்சநல்லூர், பால்கட்டளை, வடக்கு தெருவில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் ஹரிஹரசுதன், பழைய பேட்டை, நெல்லையாபுரத்தில் வசிக்கும் முத்துகிருஷ்ணன் மகன் முருகபெருமாள் மற்றும் பழைய பேட்டை, நெல்லையாபுரத்தில் வசிக்கும் பரமசிவம் மகன் நாகராஜன் ஆகியோர் சேர்ந்து 07.05.2024 அன்று
தச்சநல்லூர், பால்கட்டளை, சமுதாயநலக்கூடம் அருகே வைத்து தச்சநல்லூர், தெற்கு சிதம்பர நகர், மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நாகராஜன் மகன் சக்திவேல் என்பவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக கெட்ட வார்த்தைகளில் திட்டியும், பயங்கர ஆயுதமான வாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த மேற்படி 4 நபர்கள் மீது, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மேற்கு,.கீதா, காவல் உதவி ஆணையர், ஜங்சன் சரகம், .வெங்கடேசன், தச்சநல்லூர் குற்றம்,தச்சநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செ.ஜூடி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் பா.மூர்த்தி, ஆணைப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்
0 Comments