திருநெல்வேலி – மே,29,2024
Newz – webteam
EHPVO – அரிய நோய்க்கு சிறந்த மருத்துவம்
இரத்த வாந்தியால் பாதிக்கப்பட்டு வந்த இளைஞருக்கு திருநெல்வேலி மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களால் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது கடந்த ஆறு மாதங்களாக இரத்த வாந்தியால் பாதிக்கப்பட்டு வந்த 21 வயது ஆண் நோயாளி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.கடந்த ஆறு மாதங்களாக அவர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இரத்த வாந்தி நிற்காதலாலும் இரத்த சோகை காரணமாகவும்
அவர் உள்நோயாளியாக இரத்த நாள அறுவைசிகிச்சைபகுதியில்அனுமதிக்கப்பட்டார்.பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் மூலம் அவருக்கு கல்லீரலை உணவுகுழாய், இரைப்பை மற்றும்குடலோடு இணைக்கும் முக்கிய ரத்த குழாய் (portal vein) அடைப்பு ஏற்பட்டது என கண்டறியப்பட்டது.
இந்த portal vein அடைப்பால் உணவுகுழாய், இரைப்பை, குடல் மற்றும் மண்ணீரல் அருகில் உள்ள ரத்த நாளங்கள் பெரிதாகவும் மற்றும் எளிதில் வெடிக்க கூடியதாகவும்
மாறிவிடுகிறது.இதன் காரணமாகவே ரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் மருத்துவக்குழு ரத்த ஏற்றம் மற்றும் endoscopy முறை மூலம் உணவு குழாயில் ரத்த கசிவுஏற்படுதலை சரிசெய்ய முயற்சி செய்தனர். ஆனால் இந்த சிகிச்சை முறைக்கு பின்னரும் ரத்த வாந்தி இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் ரேவதிபாலன் பரிந்துரையின்பேரில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இந்த குழுவில் ரத்த நாள அறுவை சிகிச்சை துறைத்தலைவர். ராஜேஷ் MCH மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் P.சரவணபூபதி MCH, குடல் மருத்துவதுறை நிபுணர் கந்தசாமி DM, மயக்கவியல் நிபுணர் அமுதாராணி MD, கிருத்திகா MD ஆகியோர் இடம் பெற்றனர்.
அறுவைசிகிச்சையானது மண்ணீரல் மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள் அகற்றப்பட்டு, மண்ணீரல் அகற்றப்பட்டு மற்றும் மண்ணீரலின் ரத்த குழாயும் இடது சிறுநீரகதுக்கு செல்லும் ரத்த குழாயும்
இந்த அறுவைசிகிச்சை ஏற்கனவே பெரிதான ரத்த குழாய்களை சுருங்க செய்வதால் இரத்தவாந்தி குறைந்துவிடும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளி நல்ல முறையில் குணமடைந்தார்.
அவர் சாதாரணமாக சாப்பிட முடிந்தது, மேலும் இரத்த வாந்தி எதுவும் இல்லை. கண்காணிப்பு மற்றும்
குணமடைதல் காலத்தின் பின்னர் அவர்ஆரோக்கியமான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நோயாளியின் வெற்றிகரமான சிகிச்சையானது மேம்பட்ட அறுவை சிகிச்சை திறன்களையும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களின் கூட்டு முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகிறது
. அறுவைசிகிச்சையானது முதன் திருநெல்வேலி மருத்துவக் இந்த முறையாக கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் 5 இலட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். இந்த அறுவைசிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு நம் மருத்துவமனை நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதில் காட்டும் உறுதியின் சான்றாக விளங்குகிறது.
0 Comments