திருவாரூர் – ஜீன் -01,2024
Newz -webteam
திருவாரூர் மாவட்ட காவல்துறை
ஆயுதப்படையில் கண் பார்வை விழிப்புணர்வு முகாம்.
திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார், பொறுப்பேற்ற நாள் முதல் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தார்கள் மீது தனி கவனம் கொண்டு ஒவ்வொருவரின் உடல் நலம் மீதும் அக்கறையுடன் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கும்பகோணம் டாக்டர் அகர்வால்ஸ் கண் பரிசோதனை சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவங்கி வைக்க, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் திருவாருர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், காவலர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கும்பகோணம் அகர்வால்ஸ் கண் பரிசோதனை மைய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் ஒவ்வொருவராக அவர்களின் உடல் உபாதைகள் குறித்து கேட்டறிந்து, கண் பார்வை குறித்து நன்கு ஆய்வு செய்து கண் கண்ணாடி அணிதல், மேலும் தொடர் சிகிச்சை பற்றி எடுத்து கூறி விளக்கமளித்தனர். மேலும் கண் பார்வை குறித்தும், கண் பார்வை குறைவால் எற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் அதனை தடுக்கும் சிகிச்சை முறைகளை பற்றியும் விளக்கமளித்தனர்.
காவல் கண்காணிப்பாளர் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் பயன் பெறும் வகையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது, அனைவரும் கண் சிகிச்சை முகாமில் கலந்து பயன் பெறவேண்டும் என்றும், தொடர்ந்து இரத்த அழுத்தம், சக்கரை நோய், இருதயம் போன்றவைகள் குறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தெரிவித்தார்.
0 Comments