தூத்துக்குடி -ஜீன் -08,2024
Newz -webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் அடையாளம் தெரியாத தலைமறைவான குற்றவாளிகளை துரித விசாரணை மூலம் கண்டறிந்து கைது செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் . பத்மநாபபிள்ளை, சேரகுளம் காவல் நிலைய தலைமை காவலர்கள் வேம்புராஜ், சுப்பிரமணியன், ஏரல் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஜான் அந்தோணி ராஜ், சேரகுளம் காவல் நிலைய காவலர் பட்டவராயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கின் எதிரியை சம்பவம் நடைபெற்ற 3 மணி நேரத்திற்குள் கைது செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் . ரகுராஜன், சிறப்பு சார்பு ஆய்வாளர் . அமிர்த எபினேசர், தலைமை காவலர்கள் பாலகிருஷ்ணன், முருகன், அருள்ஜோதி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 நபர்கள் கோவில்பட்டியில் தலைமறைவாக இருந்த நிலையில் சம்பந்தப்பட்ட எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், கழுகுமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமாறன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இராமச்சந்திரன், எட்டையாபுரம் காவல் நிலைய சார்புஆய்வாளர் மாதவராஜ், எப்போதும்வென்றான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அந்தோணி திலீப், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ராஜகோபால்,சீனிவாசன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுனராஜ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர்கள் ஜான்சிராணி லட்சுமிபாய், ஜான்சன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் ரகுராம், முதல் நிலைக் காவலர் கதிரேசன், எட்டையபுரம் காவல் நிலைய முதல் காவலர் சசிகுமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் சதீஷ்பாலா, கோவில்பட்டி போக்குவரத்துப்பிரிவு காவலர் மகேஷ்வரன் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 7,000/- அபராதமும் பெற்றுத்தந்த தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் லதா, தலைமை காவலர்கள் அன்னலட்சுமி, ரபிலா குமாரி மற்றும் முதல் நிலை காவலர் முருகஜோதி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 2,000/- அபராதமும் பெற்றுத்தர உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முதல் காவலர் அருண்சுந்தர் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்குகளை கடந்த மாதத்தில் இ பைலிங் மூலம் 36 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு அனுப்பி வைத்த ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் காண்டீபன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பவம் நடைபெற்ற அன்றே இரவு ரோந்து அலுவலின்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு திருடு போன வாகனத்தை பறிமுதல் செய்து, எதிரியையும் கைது செய்த எப்போதும்வென்றான் காவல் நிலைய காவலர் முத்தமிழரசன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்தவரை பிடிக்கும் போது தன்னை காயப்படுத்தி தப்பிக்க முயன்ற எதிரியை துணிச்சலாக மடக்கி பிடித்த தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய காவலர் முனாவர் செரிப் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற வழக்குகளில் எதிரிகளின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்வதிலும், வாதி இழந்த பணத்தை மீட்டு வழங்குவதும் சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவலர் சதீஷ்குமார் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை உடனடியாக கைது செய்து சிறப்பாக பணிபுரிந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் இழந்த மொபைல் போன்களை மீட்டு வழங்குவதிலும் சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவலர் மகேஷ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினரின் சிறந்த பணியை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments