திருப்பத்தூர் -ஜீன்-08,2024
Newz -webteam
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் பாய்ஸ் க்ளப் மாணவர்களுக்கு ஏலகிரி மலை சுற்றுலா!
திருப்பத்தூர், 2024 ஜூன் 8: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் காவல் பாய்ஸ் க்ளப் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் என மூன்று உட்கோட்டத்திலும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., உத்தரவின் பேரில், இன்று மாவட்ட காவல் பாய்ஸ் க்ளப் மாணவர்களுக்கு ஒரு நாள் ஊக்கமூட்டும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது
.அதன்படி இன்று மாணவர்கள் மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து வரப்பட்டு காவல்துறை நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்தும், மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் அனைத்து அலுவலகங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் பணி குறித்து விவரித்தும் பிறகு ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் ஆயுத தளவாடங்களை பற்றி விளக்கி ஆயுதங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காவல் பாலர் மன்றத்தைச் சார்ந்த 50 மாணவர் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இன்று கலந்து கொண்டனர் மேலும் மாணவர்கள் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை நேரில் கண்டு, காவல்துறையின் சிறப்பான பணிகளைப் பற்றி அறிந்து கொண்டனர் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
0 Comments