கள்ளக்குறிச்சி -ஜீன் -19,2024
Newz – webteam
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அதிரடடி மாற்றம்எஸ்.பி., சஸ்பெண்ட், கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கூண்டோடு அதிரடி மாற்றம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்வரன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மாவட்ட எஸ்.பி., சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, புதிய எஸ்.பியாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.காவல்துறை, வருவாய் துறையினரின் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் பாக்கெட் சாராயம் அருந்தியிருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இதைதொடர்ந்து, அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான சோதனையில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் மெத்தனால் கலந்துள்ளதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
0 Comments