திருநெல்வேலி -ஜீன் -25,2024
Newz -webteam
திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர், ஊருடையார்புரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் சிவபெருமாள் என்ற கங்குலி, வயது 24 என்பவர். தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம், திருநெல்வேலி மாநகரத்தில் பாளையங்கோட்டை, பேட்டை மற்றும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் 11 வழக்குகளில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட சம்பந்தப்பட்ட நபராவார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அனில் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வள்ளிநாயகம் என்பவரை 06.06.2024 ஆம் தேதி 18:00 மணியளவில், தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோவில் அருகே பணம் பறிக்கும் நோக்கத்துடன் அருவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சிவபெருமாள் என்ற கங்குலி என்பவரை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மேற்கு, V.கீதா, காவல் உதவி ஆணையர், ஜங்ஷன் சரகம், வெங்கடேசன், தச்சநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப, ஆணைப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் திருநெல்வேலி மாநகரம் திருநெல்வேலி, பேட்டை, நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் அழகர், வயது 21 என்பவர். திருநெல்வேலி மாநகரத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பேட்டை மற்றும் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் மூன்று கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராவார். திருநெல்வேலி, பேட்டை, மைலப்பபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார் என்பவரை 12.06.2024 ஆம் தேதி 09:00 மணியளவில் கருங்காடு செல்லும் ரோட்டில், ரயில்வே கேட் அருகே பணம் பறிக்கும் நோக்கத்துடன், அருவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அழகர் என்பவரை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மேற்கு, கீதா, காவல் உதவி ஆணையர், ஜங்ஷன் சரகம், வெங்கடேசன், தச்சநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கு.மாரியப்பன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் பா.மூர்த்தி, இகாப, ஆணைப்படி இன்று . குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
0 Comments