இராணிப்பேட்டை – ஜீன் -26,2024
Newz – webteam
சுமார் 20 இலட்சம் மதிப்புள்ள 120 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி
இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இ.கா.ப., மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த நான்கு மாதங்களாக பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 120 செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 20,00,000 ஆகும்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் யாரேனும் செல்போன் தவறவிட்டால் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்
.
மேலும் இணைய வழிய குற்றங்கள் தொடர்பாக உதவி எண்:- 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று எடுத்துரைத்தார்.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் .குணசேகரன்(CWC),திரு.குமார் (CCW), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் சீராளன்(DCRB), வெங்கடக்கிருஷ்ணன் (IUCAW), ஆய்வாளர்கள் அருண்குமார் (மாவட்ட தனிபிரிவு).கலையரசி (மாவட்ட குற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் முதற்கட்டமாக கடந்த 14.05.2024 அன்று வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் களவுப்போன 30 செல்போன்களை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா அவர்கள் தலைமையி லான போலீசார் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
0 Comments