திருநெல்வேலி – ஜீன் -26,2024
Newz -webteam
திருநெல்வேலி மாவட்டத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறையினர் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்க வேண்டும்
என்றும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்பு மாணவ மாணவிகள் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதாதைகள் ஏந்தி நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0 Comments