திருச்சி – ஜீன் -26,2024
Newz -webteam
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இளைஞர்களின் நலனை காக்க போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, இ.கா.ப. தலைமையில் இன்று 26.06.2024-ந்தேதி போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நிகழ்ச்சி, திருச்சி வயலூர்ரோடு பிஷப் ஹீபர் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டமானது இன்று மாலை 6.மணிக்கு தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் செல்வி.நிவேதாலெட்சுமி, காவல் உதவி ஆணையர், ஸ்ரீரங்கம் சரகம் வரவேற்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப தலைமையேற்று நடத்தினார்
நிகழ்ச்சியில், காவல் துணை ஆணையர் (வடக்கு) விவேகானந்த சுக்லா, இ.கா.ப., டாக்டர்.பிரின்சிமெர்லின், முதல்வர், பிஷப் ஹீபர் கல்லூரி, டாக்டர்.ரமேஷ்பாபு, MBBS. DA., மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறை, டாக்டர்.ஆனந்த ஜிடியோன், Dean. பிஷப் ஹீபர் கல்லூரி, டாக்டர்.கேப்ரியல், Associate Dean, பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே போதை பொருட்களின் தீமைகள் குறித்து
சிறப்புரையாற்றினார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசுகையில், போதை பொருள்கள் பற்றி மாணவ சமுதாயமாகிய உங்களுக்கு அதன் நன்மை தீமைகள் பற்றி ஏற்கனவேதெரிந்திருக்கும். போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்த்ல் தொடர்பாக மாவட்டஆட்சியர் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவர்கள் மற்றும் சில அரசு ஊழியர்களை கொண்டு குழு ஏற்படுத்தி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தகவல் சேகரிக்க இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவ சமுதாயத்தினர் நீங்கள் போதை பொருள்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், போதைபொருள்களின் விற்பனை மற்றும் பயன்படுத்வோர் பற்றிய தகவல்களை சமுதாய நல்ல நோக்கில் காவல்துறைக்கு தரவேண்டும். அதற்கான Toll Free எண்.10581 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். போதை பழக்கத்தினால் இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழக்கின்றார்கள். உடல்நலன் இழக்கின்றார்கள். அவர்கள் ஒட்டு மொத்த குடும்பம் பாதிப்படைகிறது.
நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். இளைஞர்கள் போதைபயன்பாட்டால் பாதிக்க்பட்டிருந்தால், அவர்களுக்கு தண்டனை வழங்காமல் அவர்கள் அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது நமது கடமை. மேலும், போதை பொருள்களுக்கு எதிராக ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகள் Anti-Drug Club என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கூல்லீப், ஹான்ஸ், போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் யாரும் விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினலோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தங்களுக்கு போதை பழக்கும் இல்லையென்றாலும் அதனை பற்றி தகவல் தெரிவித்து சமுதாயத்திற்காக கடமையாற்ற வேண்டும். மேலும் சமூக சிந்தனை படிக்கின்ற காலத்தில் வளர்த்து கொள்ளவேண்டும்.
கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் மற்றும் இதர போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் திருச்சி மாநகர காவல்துறை முனைப்புடன்செயல்பட்டு வருகிறது என சிறப்புரையாற்றினார்கள். மேலும் இக்கூட்டத்தில் சுமார் 1200. மாணவ மாணவியார் கலந்து கொண்டனர்
0 Comments