தென்காசி -ஜீலை -01,2024
Newz – webteam
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 50 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் ( ஜனவரி – ஜூன்) கஞ்சா வழக்கின் குற்றவாளிகள் 10 பேர், கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேர், கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகள் 17 பேர், போக்சோ வழக்கின் குற்றவாளிகள் 7 பேர், கொள்ளை, வழிப்பறி வழக்கின் குற்றவாளிகள் 5 பேர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்
குற்றவாளிகள் 2 பேர் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் குற்றவாளிகள் 2 பேர் உட்பட 50 நபர்கள் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.சுரேஷ்குமார் B.E., பரிந்துரையின் பேரில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் 50 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் குற்ற செல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments