தூத்துக்குடி -ஜீலை -02,2024
Newz -webteam
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.
ஆழ்வார்திருநகரி செம்பூர் தவசிநகரை சேர்ந்த பெரியபெருமாள் மகன் காசி (52) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் செல்வமணி (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 30.06.2024 அன்று காசி அவரது வீட்டில் முன்பு தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த செல்வமணி மேற்படி காசியை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து காசி அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் வழக்குபதிவு செய்து செல்வமணியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments