திருநெல்வேலி -16,2024
Newz -webteam
திருநெல்வேலி மாவட்ட காவல்
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு 2 குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர்
சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புலவன் குடியிருப்பு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் (77) என்பவர் 11.07.2024 அன்று புலவன் குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா கோயிலுக்கு அருகே உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு இறந்து போன பொன்னம்மாளின் ஊரில் முக்கிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தும், சம்பவ இடங்களை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் ஊரில் உள்ள பல்வேறு தரப்பினர்களிடம் விசாரித்த போது. முத்துராஜ் குடும்பத்திற்கும். பொன்னம்மாளின் குடும்பத்திற்கும் நில எல்லை பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் புலவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துராஜ்(27), மற்றும் பூதத்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(27) ஆகிய இருவரையும் விசாரித்த போது. முன்னுக்குப் பின் முரணாக பேசினர். காவல்துறையினர் தீவிர விசாரணையில் பொன்னம்மாளுக்கும், முத்துராஜ்க்கும் இடையே இருந்த நிலப்பிரச்சனை காரணமாக புலவன் குடியிருப்பு பொன் பெருமாள் சாஸ்தா கோவில் அருகே பொன்னம்மாள்
அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக நின்று கொண்டிருக்கும் போது, அங்கு வந்த முத்துராஜ், ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து அருவாளால் கழுத்தில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி இருவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
0 Comments