திண்டுக்கல் -ஜீலை 21,2024
News -webteam
கொடைக்கானல் அருகே தங்கும் விடுதியில் போதை பொருட்கள் பறிமுதல், 3 விடுதிகளுக்கு சீல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் விடுதிகளில் போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக கோட்டாட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
வருவாய்த் துறையினர், காவல்துறையினர், நகராட்சி அதிகாரிகள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து கோட்டாட்சியர் சிவராம் தலைமையில் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது பாலா என்பவருக்கு சொந்தமான விடுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள், மதுபான பாட்டில்கள் இருந்தன. இந்த விடுதியில் தங்கியிருந்த சென்னையை சேர்ந்த 12 இளைஞர்கள் பெங்களூரை சேர்ந்த 6 இளைஞர்கள் என 18 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி உரிமையாளர் பாலா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் மேலும் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த 3 தங்கும் விடுதிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
0 Comments